டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது!
தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று (மே 4) தொடங்குகிறது. வரும் 28ஆம் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் இருக்கும்.
சீமானுக்கு அனுமதி மறுப்பு!
வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கூடுதலாக 365 பேருந்துகள் இயக்கம்!
வார இறுதி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று கூடுதலாக 365 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
உலகளவில் தீயணைப்பு வீரர்களின் தியாகம் மற்றும் கடின உழைப்பை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 4ஆம் தேதி (இன்று) சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஊட்டிக்கு கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள்!
கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து ஊட்டிக்கு இன்று முதல் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
த்ரிஷா பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஐ.எஸ்.எல். இறுதிப் போட்டி!
ஐ.எஸ்.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி – மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பெங்களூரு – குஜராத் மோதல்!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.
சைத்தான் ஓடிடியில் ரிலீஸ்!
அஜய் தேவ்கன், ஆர் மாதவன் நடித்துள்ள சைத்தான் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 50-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனையாகிறது.
கிச்சன் கீர்த்தனா : ஈஸி சிக்கன் பிரியாணி
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? – அப்டேட் குமாரு