தினமும் சாப்பிட்டாலும் அலுக்காத ஒரே உணவு பிரியாணி. வார இறுதி என்றாலே கொண்டாட்டம்தானே…. கொண்டாட்டம் என்றாலே பிரியாணிதானே… இந்த வார வீக் எண்டுக்கு வெயிலில் அலையாமல் வீட்டிலேயே வித்தியாசமான இந்த ஈஸி சிக்கன் பிரியாணி சமைத்து அசத்துங்கள்.
என்ன தேவை?
பாசுமதி அரிசி – ஒரு கப்
சிக்கன் – 250 கிராம்
தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 8 (நறுக்கவும்)
புதினா, கொத்தமல்லி – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
எலுமிச்சை – பாதி அளவு (சாறு எடுக்கவும்)
பிரியாணி எசென்ஸ் – அரை டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
அன்னாசிப்பூ – 2
கிராம்பு – 2
பட்டை – 2
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்யவும். அரிசியைக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகத்தைப் பொடித்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சூடானதும் பிரியாணி இலை சேர்த்து, பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரிசியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு குக்கரை மூடி, மிதமான தீயில் 10 நிமிடங்களுக்குச் சமைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து பிரியாணி எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறி 15 நிமிடங்கள் மூடிவைத்து எடுத்துக் கிளறிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: 20 வருடம் முன்பே ஸ்டாலினுக்கு வந்த ’தேசிய’ அழைப்பு! மோடி கிளறிவிட்ட ஃபிளாஷ் பேக்!