உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…

அப்போம் கடையில உள்ள டிவியில நம்ம ஜி பேசிக்கிட்டு இருந்தாரு… அதை பார்த்த நம்ம சங்கி நண்பரு, “ஜியை பார்த்தியா ஒவ்வொரு பாயிண்டும் சும்மா தெறிக்க விடுறாப்ளன்னு” சொன்னாரு.

அதுக்கு நான், “வயநாட்ல ராகுல் தோல்வி அடைவாரு… அதனால ரேபரேலியில மீண்டும் போட்டியிடறார்ன்னு சொல்றாரு. ஆனா உங்க ஜி 2014-ல வாரணாசி, வதோதரான்னு ரெண்டு தொகுதியில போட்டி போடும் போது மட்டும் இதெல்லாம் தெரியலயா? – உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியான்னு” கேட்டேன்.

அப்படியே சுவிட்ச் ஆஃப் மோடுக்கு போன சங்கி நண்பர், கப் சிப்னு டீயை குடிச்சிட்டு கிளம்பிட்டாப்ள.

நீங்க அப்டேட் பாருங்க…

Kirachand

குருபெயர்ச்சியால் பணம் கோடியா கோடியா கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டும்னு ஜோசியர் சொன்னாரு…
அதனால முன்னெச்செரிக்கையா ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன் மாமா…
என்ன ஏற்பாடு மாப்ள?
வீட்டு கூரையை பிரிச்சி வச்சுட்டேன் மாமா…
ச ப் பா ணி
மெயின் ரோடு தவிர
எந்த ரோடும்
நன்றாய் இல்லாமல் இருந்தால்
அதுதான் ஸ்மார்ட் சிட்டி
நெல்லை அண்ணாச்சி
காங்கிரஸ் அழிகிறது –
பாகிஸ்தான் அழுகிறது.
..மோடிஜி
# what about ….சீனா,..Sir?
படிக்காதவன்
வெந்து தணிந்தது காடு
வெயில் வேக்காடு இல்லாத இடமா பாத்து ஓடுன்னு தான் இன்னைக்கு எல்லாருக்குமான வாழ்க்கையா இருக்கு…
கடைநிலை ஊழியன்
bank customer care – சார் உங்க debit card க்கு ஈசி EMI லோன் ஆஃபர் இருக்கு சார்..
எனக்கு லோன் எல்லாம் வேண்டாம் டா.. ஃப்ரீ சம்மர் டூர் ஆஃபர் ஏதாவது இருந்தா சொல்லுங்க டா.. வெயில் தாங்க முடியல டா..
ச ப் பா ணி
பத்து ரூபாய் விலை ஏத்திவிட்டு ஒரு ரூபாய் குறைப்பது தான்
நவீன பொருளாதாரம்
Kirachand
மே 4 ‘கத்தரி’ வெயில் ஆரம்பிக்குது மன்னா!
நாளை முதல் நம் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக ‘குடை மிளகாய்’ கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே!
லிட்டில் கிருஷ்ணா 
நம்ம சோகத்த சொல்றதுக்கு ஆளு தேடுனா.‌.
அவனுங்க கதைய கேட்டு ஆறுதல் சொல்லி காபி வாங்கி கொடுத்து தேத்தி அனுப்ப வேண்டி இருக்கு
லாக் ஆப் 
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel