நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு எதிராக 55 கவுன்சிலர்களும் போர் கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இன்று (ஜூலை 27) மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் இருந்த பெண் கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிதி மதிப்பீடு குழு அமைப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் கொலை மிரட்டல் விடுத்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அப்பொழுது, ஒட்டுமொத்த 55 கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர் கோடி ஏந்திய நிலையில், பெண் கவுன்சிலர்கள் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆவேசமாகப் பேசினர்.
உறுப்பினர்கள் ஒருபக்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, மேயர் சரவணன், வார்டு குறித்த விஷயங்களை மட்டும் பேசவும், கட்சி தொடர்பான விஷயங்களை பேச வேண்டாம் எனவும் சொன்னார்.
ஆனால் உறுப்பினர்கள் யாரும் மேயர் சொல்வதை கேட்டு அமைதியாகாததால், கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு, கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பாதியிலேயே மேயர் மற்றும் துணை மேயர் வெளியேறினர்.
நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் மீது குற்றச்சாட்டை முன் வைத்து, மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
சென்னைக்கு வரும் ஸ்டெர்லைட் அதிபர்: எச்சரிக்கை விடுத்த திருமுருகன் காந்தி!
பாட்டுக்குயிலுக்கு வயது அறுபது!