டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

வந்தே பாரத் ரயில்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதார மாநாடு!

பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான 3 நாள் சர்வதேச மாநாட்டை இன்று டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.

ராஜஸ்தான் அமைச்சரவை கூட்டம்!

பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு விசாரிக்கவில்லை என்று சச்சின் பைலட் கூறிவந்தநிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று சைதாப்பேட்டை தேரடி திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.

சட்டமன்ற மானியக்கோரிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு!

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கோயில் சிலையே பாடல்!

விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் கோயில் சிலையே பாடல் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 326-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, ராஜஸ்தான் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆர்யாவின் ’தௌலத்தான ரவுடி’ பாடல் புரோமோ வெளியானது!

கிச்சன் கீர்த்தனா: ஆரஞ்சு ஸ்குவாஷ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *