டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இன்று (மே 14) மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

உலக அன்னையர் தினம்!

தாயின் சிறப்பை வலியுறுத்தி ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறான இன்று (மே 14) உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

கொடைக்கானல் செல்லும் ஆளுநர்!

பல்கலைக்கழக கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாட்கள் சுற்று பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானல் செல்கிறார்.

கரையைக் கடக்கிறது மோக்கா புயல்!

மோக்கா புயல் வடகிழக்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலும்‌ வலுப்பெற்று இன்று நண்பகல்‌ தென்கிழக்கு வங்கதேசம்‌ மற்றும்‌ வடக்கு மியான்மர்‌ கடற்கரையை கடக்கக் கூடும்‌.

ஐ.எஸ்.சி.இ தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐ.எஸ்.சி.இ) கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10-ஆம் வகுப்பு (ஐ.சி.எஸ்.சி ) மற்றும் 12-ஆம் வகுப்பு ( ஐ.எஸ்.சி) தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணியளவில் வெளியாகிறது.

அனுமன் ஜெயந்தி விழா!

திருப்பதியில் அனுமன் ஜெயந்தி விழா இன்று தொடங்கி வரும் 18-ந்தேதி வரை என 5 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 358வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

இன்றைய ஐபிஎல் போட்டிகள்!

ஐபிஎல் லீக் போட்டியாக இன்று ராஜஸ்தான் – பெங்களூரு அணிகளுக்கும், சென்னை – கொல்கத்தா அணிகளுக்கும் என இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

டிஜிட்டல் திண்ணை: கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா… எதிர்க்கட்சிகளின் பொது மேடை ஆக்குவாரா ராகுல்?

கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

12 thoughts on “டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *