அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதனிடையே உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் காரசாரமான வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு விசாரணையில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாறியது. அதன்படி 3வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த ஜூலை 7 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 11, 12 ஆகிய தேதிகளுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மற்றும் இடையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
தேஜகூ கூட்டம்: எடப்பாடிக்கு அழைப்பு!
“செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க ED-க்கு அதிகாரமில்லை” – கபில் சிபல்