AK Birthday : சர்ப்ரைஸ் செய்த ஷாலினி.. ரீ ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இன்று (மே 1 ஆம் தேதி) அவரது 53 வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்!

மேலும் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்களான தீனா, பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அஜித்தின் ரீ ரிலீஸ் படங்களுக்கும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தீனா படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஒவ்வொரு சீனுக்கும் எகிறி குதித்து, விசில் அடித்து, ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் பிரான்ஸ் நாட்டில் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. அங்கும் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள நடிகர் அஜித்தின் தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய திரைப்படங்களும் அதிக வசூல் செய்து புதிய சாதனையை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஷாலினியின் சர்ப்ரைஸ்!

நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது கணவனின் பிறந்தநாளுக்காக ஒரு விலை உயர்ந்த பரிசினை வழங்கி இருக்கிறார். அந்த பரிசு என்னவென்றால், அஜித் ஒரு பைக் பிரியர் என்பதால் ஷாலினி அவருக்கு ஒரு புதிய Dukati பைக்கை பிறந்த நாள் பரிசாக வழங்கியிருக்கிறார்.

Image

அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் : துரைமுருகன்

T20 WorldCup : 15 பேருமே கில்லி தான்… அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0