india alliance next meeting

மீண்டும் கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி!

அரசியல்

இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் மிசோரம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் இன்று (டிசம்பர் 3) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட நிலையில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் மற்றும் இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ராஜஸ்தான்: தோல்வியை நோக்கி காங்கிரஸ்… கொண்டாடும் பாஜக!

சத்தீஸ்கர்: பாஜக- காங்கிரஸ் இடையே பல தொகுதிகளில் மிகக் குறுகிய வித்தியாசம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *