bjp leading in rajasthan

ராஜஸ்தான்: தோல்வியை நோக்கி காங்கிரஸ்… கொண்டாடும் பாஜக!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக 110 இடங்களில் பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் 76 இடங்களுடன் பின் தங்கியுள்ளது. மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

ராஜஸ்தானில் முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து ஜெய்பூர் பாஜக அலுவலகத்திற்கு வெளியே மேள தாளத்துடன் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

சத்தீஸ்கர்: பாஜக- காங்கிரஸ் இடையே பல தொகுதிகளில் மிகக் குறுகிய வித்தியாசம்!

மத்திய பிரதேசம்: மீண்டும் ஆட்சி அரியணையில் அமர போகும் சிவராஜ் சிங் சவுகான்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0