சத்தீஸ்கர்: பாஜக- காங்கிரஸ் இடையே பல தொகுதிகளில் மிகக் குறுகிய வித்தியாசம்!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

தற்போதைய காங்கிரஸ் முதல்வரான பூபேஷ் பாகல் ஆட்சிக்கு எதிராக பாஜக பல்வேறு புகார்களை முன் வைத்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பகல் 12 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 54 இல் பாஜக முன்னிலையில் இருக்கிறது. 34 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக… பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் சுமார் 50 தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் 500 ஓட்டுகள் என்ற அளவிலேயே இருக்கின்றன.
தற்போது நான்காவது சுற்று ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிகை நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தை பாஜக விரிவுபடுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் கூட இந்த மிகக் குறுகிய வித்தியாசம் நிலவுகிறது.

மொத்தம் 63 தொகுதிகளில்  பாஜக-காங்கிரஸ் இடையிலான  வாக்கு வித்தியாசம் 500 க்கும் மேலோ அல்லது கீழோ என்ற நிலையில்தான் இருக்கிறது. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த நிலவரம் மாறுமா என்பது தெரிய வரும்.

வேந்தன்

மத்திய பிரதேசம் : மீண்டும் ஆட்சி அரியணையில் அமர போகும் சிவராஜ் சிங் சவுகான்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *