ஆம் ஆத்மியிடம் பாஜக பேரம்: கெஜ்ரிவால் குற்றசாட்டு!

அரசியல்

காங்கிரஸும் பாஜகவும் கணவன் மனைவி போல் செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் களம் இறங்கியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்த பஞ்சாபை கைப்பற்றியது போல குஜராத்தையும் கைப்பற்ற ஆம் ஆத்மி முனைப்புக் காட்டி வருகிறது.

இதனால் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆனால், குஜராத்தில் ஆம் ஆத்மி, பாஜக – காங்கிரஸ் கூட்டணிக்கு இடையேதான் போட்டி நிலவுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

என்டிடிவிக்கு கெஜ்ரிவால் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸும் பாஜகவும் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இருகட்சியினரும் கணவன் மனைவி போல் இருக்கின்றனர்.

பாஜக சொந்த கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுப்பது போன்று காங்கிரஸ் கட்சியினருக்கும் கொடுத்து வருகிறது.

பாஜக குஜராத்தில் உள்ள அனைத்து டிவி சேனல்களையும் மிரட்டி வருகிறது. டிவி நிகழ்ச்சிகளில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் யாரையும் பார்க்கமுடியாது.

நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்த பேட்டி ஒன்றைக் கேட்டேன். அதில் அவர் குஜராத்தில் காங்கிரஸுக்கும் , பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என்று கூறுகிறார்.

உண்மையில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் பாஜக கூட்டணிக்கு இடையேதான் போட்டி நடக்கிறது. பாஜக பாக்கெட்டில் காங்கிரஸ் உள்ளது. 27ஆண்டு கால பாஜக ஆட்சியால் மக்கள் சோர்வடைந்துவிட்டனர். மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனர்.

நான் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் கூறினேன். இப்படிக் கூறியதில் எந்த ஒரு முஸ்லீமோ, கிறித்துவரோ தங்களுக்குப் பிரச்சினை என்று கூறவில்லை. இதில் பாஜகதான் பிரச்சினையாக நினைக்கிறது.

மோர்பி பால விபத்து விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு பொறியாளர் மீதோ, உயர் அதிகாரி மீதோ குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. இவ்விபத்துக்கு யார் பொறுப்பு” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுபோன்று தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஆம் ஆத்மியிடம் பாஜக பேரம் பேசுகிறது. போட்டியிடாமல் ஒதுங்கினால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் சயேந்திர ஜெயினை வழக்குகளில் இருந்து விடுவிப்பதாகவும் பாஜக கூறியது என்று குறிப்பிட்டார்.

ஆனால் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை அவர் சொல்லவில்லை.

பிரியா

பாலுக்கு ஜி.எஸ்.டி: அண்ணாமலை ட்வீட்டும் அமைச்சரின் பதிலும்!

ஆர்.எஸ்.எஸ் பேரணியில் திடீர் மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *