வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் (Oral Rehydration Solution) பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என்றும் ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அரசு வழங்கும் இந்த ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மருந்தகங்களில் கிடைக்கும். அதை வாங்கிப் பருகலாம். இதை வீட்டிலேயே எளிய முறையில் அதைத் தயார் செய்து பயனடையலாம்.
முதலில், கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். அதேபோல, கரைசல் தயார் செய்யவிருக்கும் பாத்திரத்தையும் சுத்தமாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.
சுத்தமான தண்ணீர் – ஒரு லிட்டர், சர்க்கரை – ஆறு டீஸ்பூன் (ஒரு டீஸ்பூன் = 5 கிராம்), தூள் உப்பு – அரை டீஸ்பூன் என இந்த அளவுகளில் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். நீர்ச்சத்து இழப்புக்கு ஆளானவருக்கு இதை அடிக்கடி பருகக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்தக் கரைசல் தயாரித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தேவைப்பட்டால், இதே முறையில் புதிய கரைசல் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
கரைசலில் பரிந்துரைக்கு அதிகமாகக் கூடுதல் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.
கரைசல் தயாரிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால், பழச்சாறு, குளிர்பானங்களை எல்லாம் பயன்படுத்தக் கூடாது.
ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல, ஓஆர்எஸ் கரைசலை எடுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும்.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் வரை ஓஆர்எஸ் கரைசலைக் கொடுக்கலாம்.
இரண்டு முதல் ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் ஓஆர்எஸ் கரைசல் கொடுக்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் ஓஆர்எஸ் கரைசல் அருந்தலாம்.
உடலில் ஏற்படும் நீரிழப்பை சமன் செய்ய ஓஆர்எஸ் கரைசலை மட்டுமே சிகிச்சை என்று கொள்ளாமல், மேலும் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதை மேற்கொண்டு, தவறாமல், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: மாம்பழம் வாங்கப் போறீங்களா… இதை கவனிங்க!
ஆ.ராசா தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு… திக் திக் 20 நிமிடங்கள்!
சம்மர் சீசனில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு
தர்மபுரி… வன்னியர் ஓட்டு யாருக்கு? தலித் ஓட்டு யாருக்கு? மற்றவர்களின் ஓட்டு யாருக்கு? ரகசிய விவரம்!