ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாவதற்கு முன்பு ஃப்ளிப் மாடல் போன்களுக்கென ஒரு மவுசு இருந்தது. அதும் நோக்கியா ஃப்ளிப் மாடல் என்றால் தனி வரவேற்பு உண்டு. அந்த மவுசு இன்றளவும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
ஸ்மார்ட் போன்களில் மட்டுமே UPI ஸ்கேன் வசதி இருந்து வந்த நிலையில் இனி நோக்கியா 2660 ஃப்ளிப் மாடலில் UPI ஸ்கேன் வசதி இடம்பெறும் என நோக்கியா மாடல் போன்களை தயாரிப்பதற்கான லைசன்ஸை வைத்துள்ள HMD குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பே ஃபங்ஷனாலிட்டி அம்சம் உள்ளதால் ஒரே பட்டனில் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பணப்பரிவர்தனையை மேற்கொள்ள முடியும்.
UPI ஸ்கேன் வசதி ஆனது புதிதாக போன் வாங்குபவர்களுக்கு கிடைக்காது. ஏற்கனவே நோக்கியா 2660 ஃப்ளிப் மாடல் போன் வைத்துள்ளவர்களுக்கு அப்டேட் வாயிலாக இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது.
HMD குளோபல் நிறுவனம் ஏற்கனவே இருக்கக்கூடிய பயனாளர்களுக்கு இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை வெளியிட்டிருந்தது. தற்போது அனைவருக்கும் அப்டேட் கிடைப்பதை உறுதிசெய்துள்ளது.
நோக்கியா 2660 ஃப்ளிப் மாடலானது 2.8 இன்ச் டிஸ்ப்ளே உடன் பயன்படுத்துவதற்கு நல்ல அனுபவத்தை தருகிறது. தற்போது புதிதாக பாப் பிங்க் மற்றும் லஷ் க்ரீன் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியாகியுள்ளது.
ரூ.4,699க்கு கிடைக்கும் நோக்கியா 2660 ஃப்ளிப் மாடல் போன் அமேசான், ப்ளிப்காட் போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்ட்ட ரீடைல் ஷோரூம்களில் விற்பனையில் இருக்கிறது.
-பவித்ரா பலராமன்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
நானியின் ’ஹாய் நான்னா’: டீசர் ரிலீஸ் அப்டேட்..!
தீபாவளி போனஸ்: போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை!