இன்னைக்கு காலையில ஜூஸ் கடைக்கு போயிருந்தேன்…
அப்பா, அம்மா, பையன்னு மூணு பேரு ஃபேமிலியாட ஜூஸ் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க…
அப்பா போன்ல பேசிக்கிட்டு இருந்தப்போம், ”பையனுக்கு தானே… சம்மர் ஹாலிடேஸ் நல்லா போகுது. கொஞ்சம் நேரம் டிவி பார்க்குறான், கொஞ்சம் நேரம் மொபை பார்க்குறான்…
அப்புறம் கொஞ்சம் நேரம் டிவி பார்க்குறான், கொஞ்ச நேரம் மொபைல் பார்குறான்… இப்படி தான் அவனோட சம்மர் ஹாலிடேஸ் போய்க்கிட்டு இருக்குன்னு” சொன்னாரு..
இதை கேட்டுக்கிட்டு இருந்த நான், கொஞ்ச நேரம் பால்ய கால நினைவுகளை அசைபோட்டுட்டு அங்க இருந்து கெளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
2022 ஆகஸ்ட் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்தும் ஒன்றரை ஆண்டுகள் கைது செய்யாதது ஏன்? – உச்ச நீதிமன்றம்
தேர்தல் இப்பத்தானே வந்துருக்கு யுவர் ஆனர்!
நெல்லை அண்ணாச்சி
பாஜக வுக்கு எதிராக அதானியின் ” NDTV ”
# அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகி விட்டதே…மோடிஜி
mohanram.ko
ஜவுளி கடைக்காரருக்கு ஆடி மாதம் எப்படியோ, அதே மாதிரி தான் நகைக்கடைக்காரருக்கு அட்சய திருதியை
ச ப் பா ணி
ஒரே நாளில் 3ஆவது முறை தங்கம் விலை உயர்வு
#ஒரு நாள் ல ஒரு முறை உயர்வது சகஜம்..அதென்ன 3 முறை
வசந்த்
பொது விவாதத்தில் பங்கேற்க மோடி, ராகுலுக்கு அழைப்பு
ஓ மை காட்..
balebalu
Centralised AC என்ற பெயரில் பேஸ்மெண்டிலும் , பாத்ரூமிலும் AC ஓடும் போது
யாருமில்லாத கடையில் யாருக்கு டீ போடுற என்றுதான் கேட்க தோன்றுகிறது
ச ப் பா ணி
நமக்கு தெரிஞ்ச வெயிட் லிப்ட் எல்லாம்.. தண்ணி கேனை தலைக்கு மேல தூக்கி தரையில் இறக்கி வைப்பது தான்.
குருநாதா
//கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்,ஆனா கைவிட்ருவான்.//
அதான் நிறைய கொடுத்துட்டியே இனி கை விட்டா என்ன விடலனா என்ன
black cat 🐈⬛
News – சேலம் தோப்பூரில் முருகர் சிலை திறப்பு
ரியல் முருகன் – எனக்கும் அந்த சிலைக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது
Krishna Kumar L
ஏ.ஆர்.ரகுமான், இளையராஜாவிடம் 500 படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியதாக ஒரு வதந்தி உலவுகிறது. 500 படங்களில் தன்னுடைய உதவியாளராக ரகுமானை ஊட்டி வளர்த்த இளையராஜாவுக்கு அவர் காலம் முழுக்க நன்றி செலுத்த வேண்டும் என்றும் ராஜா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள்.
ஆஸ்கர் விருது வாங்கியதற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் நடத்திய பாராட்டுவிழாவின் போது இளையராஜா பேசிய பேச்சிலிருந்து இந்த வதந்தி, தீயாக மாறியது.
இதற்கு சாத்தியமிருக்கிறதா என்றே தெரியவில்லை.
ஏனெனில் –
ஏ.ஆர்.ரகுமான் 1967ல் பிறந்தவர். 1992ல் வெளிவந்த அவரது முதல் படமான ’ரோஜா’வுக்கு இசையமைக்கும் போதே அவருக்கு வயது 25 தான். அதற்கு முன்பே தனியாக ரேடியோ மற்றும் டிவி விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்தார். தனியாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவும் ஆரம்பித்து விட்டார்.
இளையராஜாவின் 500வது படமான ‘அஞ்சலி’ வெளிவந்தது 1990ஆம் ஆண்டு. ஒருவேளை அந்த வதந்தியில் குறிப்பிடுவதைப் போல அவர் இளையராஜாவிடம் 500 படங்களுக்கு உதவியாளராக இருந்திருக்க வேண்டுமேயானால் ‘அன்னக்கிளி’க்கு முன்பு இருந்தே பணியாற்றி இருக்க வேண்டும். ‘அன்னக்கிளி’ வெளிவந்தபோது ரகுமானுக்கு வயது 8 தான். கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில்தான் 50க்கும் மேற்பட்ட
படங்களுக்கு இசையமைத்த ரகுமானுடைய தந்தையார் காலமானார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு பள்ளியில் படித்துக் கொண்டே பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு கீபோர்ட் வாசித்திருக்கிறார். பேண்ட் குழு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார். ட்ரம்ஸ் சிவமணி, பாடகர் சுரேஷ் பீட்டர்ஸ் போன்றோரோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
எலெக்ட்ரானிக் மியூசிக் அமைக்கும் சிந்தஸைஸரை திறமையான முறையில் கையாளுவார், கீபோர்ட் வாசிப்பார் என்கிற முறையில் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, எம்.எஸ்.வி, அம்சலேகா உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களோடு பணியாற்றி இருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான், ஒரு சுயம்பு. மிக இளம் வயதிலிருந்தே தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தாலும், உழைப்பாலும் தன் துறையில் ஆஸ்கர் எனும் சிகரம் எட்டியவர். அவர் நன்றிக்குரியவராக ஒருவருக்கு இருக்க வேண்டுமேயானால், 4 வயதிலேயே அவருக்கு கீபோர்ட் சொல்லிக் கொடுத்த அவருடைய அப்பாவுக்குதான் இருக்க வேண்டும்.
500 படங்களுக்கு தன்னிடம் ரகுமான் உதவியாளராக இருந்தார் என்று ராஜா சொல்லுவாரேயானால், அது முழுப்பொய்யாகதான் இருக்க முடியும். ஆஸ்கர் வாங்கியதற்காக ரகுமானுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு முன்பாக, ரகுமானை எங்கும் இதுபோல இளையராஜா சொந்தம் கொண்டாடியதாக நினைவில்லை.
ஏ.ஆர்.ரகுமான் எவரிடமும் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியதில்லை.
ரகுமானைப் பொறுத்தவரை அவர் இளையராஜாவுக்கும் சில படங்களில் கீபோர்ட் இசைத்தாரே தவிர, இளையராஜாவுக்கு மட்டுமே வாசித்தவரல்ல. 20க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுக்கு கீபோர்டு வாசித்திருக்கிறார், அவ்வளவுதான். கீபோர்ட் வாசிக்க அவரை முதன்முதலாக பயன்படுத்தியவரும் இளையராஜா அல்ல. மலையாள இசையமைப்பாளரான அர்ஜூனன்.
ரகுமானுக்கு சிறுவயதில் பெரும் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன், தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் போன்றவர்களின் உலக சுற்றுலாக்கள் மூலமே கிடைத்தது.
ரகுமான், ராஜாவைப் போலவே மகத்தான வெற்றியடைந்த கலைஞன். ராஜாவை விடவும் சர்வதேச அரங்கில் பிரபலமானவரும் கூட. எனவே, அவருடைய வெற்றியின் கணக்கை ராஜாவின் அக்கவுண்ட்டில் விவரம் தெரியாமல் யாரும் சேர்க்க வேண்டாம்.
இளையராஜாவைக் கொண்டாட எத்தனையோ ‘நிஜமான’ காரணங்கள் நம்மிடம் உண்டு. பொய்யான காரணத்துக்கான தேவையே இங்கில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்… கவின் எமோஷனல்!
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டாரா? நீதிமன்றத்தில் நடந்த விவாதம்!