update kumaru January 1 2024

2024 ஆரம்பமே சும்மா அதிருதடா: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

புத்தாண்டு தினமான இன்னைக்கு நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன். அவருக்கு விஷ் பண்ணிட்டு, இரண்டு பேரும் நல்லா சாப்டோம், அப்புறம் கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு, சரி டிவி பார்க்கலாம்னு ஆன் பண்ணோம். update kumaru January 1 2024

“நண்பா, நல்ல படமா வைங்கன்னு” அவருக்கிட்ட சொன்னேன்…

ஒகேன்னு சொன்னவரு, ஒவ்வொரு சேனலா மாத்திக்கிட்டு இருந்தாரு…அப்போம் ஒரு நியூஸ் சேனல்ல, “ஜப்பானில் நிலடுக்கம்…மக்கள் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம்னு” பிரேக்கிங் நியூஸ் போய்க்கிட்டு இருந்துச்சு.

அப்படியே ஸ்டாப் பண்ண சொன்னேன்…

இரண்டு பேரும் நிலநடுக்கம் நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கோம்…

அப்போம் அவரு, “இந்த வருஷம்….ஆரம்பே இப்படி இருக்கு… இன்னும் என்னென்னலாம் பார்க்க வேண்டியதிருக்கோன்னு” ‘உச்’ கொட்டுனாப்ல.

நானும் அவரு கூட சேர்ந்து ‘உச்’ கொட்டிட்டு, “அன்புள்ள 2024-ஏ கொஞ்சம் பார்த்து பண்ணுன்னு” கேட்டுக்கிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன் 
2024 – Happy New Year.. Welcome 2024 னு கத்துனியே.. இந்தா வந்துடேன்.. இப்ப என்ன பண்ண போற?
நா சும்மாவே ஒன்னும் பண்ண மாட்டேன்.. அதுக்கு னு இப்படி உடனே கேக்குறியே.. உனக்கு மனசாட்சி இல்லையா..

மயக்குநன்
ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கிறது!- பிரதமர் மோடி.
நடக்கிற விஷயங்களை எல்லாம் பார்த்தா… ‘ஏழைத்தாயின் மகனுக்கு’ அதிகாரம் அளிக்கத்தான் முன்னுரிமை கொடுக்கிற மாதிரி தெரியுது..!

 

ச ப் பா ணி
அலைபாயுதே மாதவன்ல இருந்து மிடில் க்ளாஸ் மாதவனாய் மாறுவதே காதல் டூ கல்யாணம்.
வன்ம கிச்சா
அடுத்த வருசம் ஆச்சும் நல்ல வருசமா அமைய வேண்டும்
ஜீ ~நான் இருக்குற வரைக்கும் உனக்கு அது நடக்காதுடா.
சப்பாணி 
சந்தோசமாய் வரவேற்று சங்கடத்துடன் வழியனுப்புகிறோம் ஒவ்வொரு வருடத்தையும்!
Manjari
பழைய காலண்டரை எடுத்துப் போட்டுட்டு புதுக்காலண்டரை மாற்றுவதற்குத்தான் எத்தனை எத்தனை கொண்டாட்டங்களும் குதூகலங்களும்!
update kumaru January 1 2024
Villanism
ஒவ்வொரு வருசமும் புத்தாண்டு வாழ்த்து சொல்றியே யார்னே நீ உன்னோட ப்ரண்டு தான்.
டிசம்பர் 31 அன்னிக்கு மட்டும் வாழ்த்து சொல்லிட்டு அக்கவுண்டை டீ ஆக்டிவேட் பன்னிடுவேன்.
update kumaru January 1 2024
கடைநிலை ஊழியன் 
புத்தாண்டு விடுமுறை முடிந்து விட்டது.. மீண்டும் வேலை வேலை என்று ஓட வேண்டும் என்பதை உணர்கிறான் வீரன்..
+1
4
+1
14
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *