மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே அநேக இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கோடை மழை பெய்ததன் காரணமாக மதுரையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால்கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சிறுவர்கள் உட்பட 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் காய்ச்சல் காரணமாக 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி சிகிச்சை பெறுபவர்கள் 3 முதல் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 55 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…