பியூட்டி டிப்ஸ்: கூந்தலை அயர்ன் செய்வது அழகானதா, ஆபத்தானதா?

Published On:

| By christopher

Is ironing hair cute or dangerous?

கூந்தலை அயர்ன் செய்து கொண்டால் அழகு என்று பலர் நினைத்துக்கொண்டு கூந்தலை எப்படி அயர்ன் செய்வது என்று தெரியாமலேயே அயர்ன் செய்யும் கருவியை வாங்கி வீட்டிலேயே தினமும் அயர்ன் செய்து கொள்வார்கள். இது ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். Is ironing hair cute or dangerous?

அயர்ன் என்பது அதிகபட்ச சூட்டை உபயோகித்துச் செய்யப்படுவது. என்றாவது ஒருநாள் கூந்தலை அயர்ன் செய்து கொள்வது ஓகே.

ஆனால், வீட்டிலேயே அதற்கான கருவியை வாங்கிவைத்துக்கொண்டு அடிக்கடி அயர்ன் செய்வது கூந்தலுக்குக் கெடுதலானது.

முடியின் வழியே வெப்பம் உள்ளே ஊடுருவி, கூந்தலின் வேர்க்கால்களை பாதிக்கும். முடி வளர்ச்சி குறையும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளர்வது சிரமமாகும்.

எனவே அடிக்கடி அயர்னிங் என்கிற ஆசையை மறந்துவிட்டு, கூந்தலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய விஷயங்கள் பற்றி யோசியுங்கள்.

தரமான எண்ணெய், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உபயோகிக்கலாம். ஹேர் பேக் உபயோகிக்கலாம். கூந்தலை ஸ்டைலிங் செய்வதைவிடவும் கூந்தலுக்கு போஷாக்கு கொடுப்பதுதான் சிறந்தது.

எனவே, அதில் கவனம் செலுத்துங்கள். அதையும் மீறி கூந்தலை அயர்ன் செய்தாக வேண்டும் என நினைத்தால் பெரிய கடைகளில் கிடைக்கும், ‘ஹீட் ரெசிஸ்டன்ட் ஸ்டைலிங் புராடக்ட்ஸ்’ அல்லது ‘தெர்மல் ஸ்டைலிங் புராடக்ட்ஸ்’ உபயோகிக்கலாம்.

இந்தப் பொருள்களை உபயோகிக்கும் போது, அயர்ன் செய்வதால் ஏற்படும் சூட்டின் காரணமாக கூந்தல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஹேர் அயர்னுக்கான கருவி வாங்கும்போது `செராமிக் அயர்ன்’ என்று பார்த்து வாங்கலாம். அது சூட்டை ஒரே மாதிரி வெளியேற்றும். தெர்மோ ஸ்டாட் இருப்பதால் போதுமான வெப்பம் வந்ததும் தானாக ஆஃப் ஆகிவிடும். Is ironing hair cute or dangerous?

ஹேர் அயர்ன் செய்யும்போது 180 டிகிரி சென்டிகிரேடு முதல் 220 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் கொடுக்கப்படும்.

எப்போதுமே குறைந்த அளவு வெப்பத்தில் வைத்து அயர்ன் செய்ய வேண்டும். அதிக வெப்பத்தில் வைத்துச் செய்யும்போது கூந்தல் பலவீனமடைந்து உதிரும். எப்போதும் கூந்தலின் வேர்க்கால்களின் அருகே அயர்ன் செய்யக் கூடாது” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மட்டர் பனீர்

முன்வந்த ரெட் ஜெயண்ட்: விக்ரம், சந்தானத்துடன் மோதும் யோகிபாபு

டிஜிட்டல் திண்ணை: டிசம்பருக்குள் துரைமுருகனை நோக்கி ED… டென்ஷன் ஸ்டாலின்

”ஆளுநர் மீதான வழக்கில் பின்வாங்க மாட்டோம்”: அமைச்சர் ரகுபதி உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel