நம்ம ஃப்ரண்டு அதிமுகவுல இருக்காரு. அவர்கிட்ட, ‘என்னய்யா ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவிய நீக்கின இணை ஒருங்கிணைப்பாளரு இடைக்காலப் பொதுச் செயலாளரு ஆனாரு.
கொஞ்சநாளா இடைக்காலப் பொதுச் செயலாளர் இல்லைனு சொல்லி இணை ஒருங்கிணைப்பாளராகவே மாறினாரு.
இப்ப மறுபடியும் இடைக்காலப் பொதுச் செயலாளராயிட்டாரு. இதுக்கு இடையில ஏற்கனவே ஒரு பொதுச் செயலாளரு கேஸ் போட்டிருக்காரு. இந்த நிலைமையில இடைக்காலப் பொதுச் செயலாளரா இல்லையானு இன்னும் ஒரு மெயின் கேஸ் இருக்குனு ஜட்ஜ் சொல்லியிருக்காரு.
இப்ப உன் கட்சிக்கு யாரு பொதுச் செயலாளர்?’னு கேட்டேன்.
அம்மானு சத்தம் போட்டுக்கிட்டே மயங்கி விழுந்துட்டாப்ல. நீங்க அப்டேட் பாருங்க…

கடைநிலை ஊழியன்
என்ன பிரச்சனை ‘னே தெரியல.. நைட் தூக்கமே வர மாட்டிங்குது டாக்டர்..
செல்போன் ‘ல BSNL சிம் போடுங்க..எ எல்லாம் சரி ஆகிரும்..

சரவணன். 𝓜
பாஜக ஆளும் மாநிலங்கள் மிக விரைவான வளர்ச்சிக்கு சாட்சிகளாக இருக்கின்றன – பிரதமர் மோடி.
~ எவண்டா அது ராஸ்கல் குஜராத் போதைப் பொருள் கடத்தல் பத்தியா பிரதமர் பேசிக்கிட்டு இருக்கார்னு கேட்டது?

Se.Tha Elangovan
மறுபடியும் முதல்ல இருந்தா…
குருநாதா … முடியல குருநாதா…
இங்கிட்டும், அங்கிட்டும் ‘இலை’ பறந்துகிட்டே இருக்கே…
இலையை பிச்சிடாம இருந்தா சரி…

சாணக்கியன்
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதி தேவையா?- பாரதிய ஜனதா கேள்வி
கார்ப்பரேட்டுக்கு கடனை தள்ளுபடி செய்வது தேவையா மக்கள் கேள்வி.
balebalu
சட் ‘ டென்று மாறுவது வானிலை மட்டுமல்ல அதிமுக தீர்ப்பு களும் தான்

சாணக்கியன்
ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்”
ஒன்றரை கோடி தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம்”
ஒன்றரை கோடி தொண்டர்கள் புரட்சிதாய் சின்னம்மா பக்கம்”
ஆக மொத்தம் நாலரை கோடி தொண்டர்களா இருக்காங்க.
கடைநிலை ஊழியன்
தீர்ப்பு யாருக்கு சாதகமா இருக்கோ இல்லையோ.. பட்டாசு கடைக்கும், ஸ்வீட் கடைக்கும் சாதகமா இருக்கு..

சரவணன். 𝓜
ஏசுவுக்கு அப்புறம் ஆடு மூலம் பிரபலமானது அண்ணாமலையா தான் இருக்கும்..😂

கோழியின் கிறுக்கல்
ஆளவந்தானையும், அந்நியனையும் ஒண்ணா சேர்ந்து மிக்ஸியில் அரைத்தால்,
வழவழவென்று “Cobra” வரும்!!
–லாக் அப்
மீனவர்களுக்கு சொல்றாங்களே… மாணவர்களுக்கு?: அப்டேட் குமாரு