வட இந்தியத் திருமணங்கள் மற்றும் ஹோலி, தீபாவளி போன்ற விசேஷ சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுபவை பாரம்பரியமான இந்த ஸ்வாலிகள். இவற்றை ஒரு கப் சூடான மசாலா தேநீருடன் சிற்றுண்டியாக ருசிக்கலாம். குழந்தைகளுக்கேற்ற சத்தான உணவு இது.
என்ன தேவை?
முழு உளுந்து மாவு – கால் கப் (உளுந்தை வறுத்து அரைத்தது)
மைதா மாவு – ஒரு கப்
வறுத்துப்பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது)
ஃபுட்கலர் (விரும்பினால்) – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாகத் தேய்த்து வெயிலில் ஒரு மணி நேரம் வைக்கவும். காய்ந்தவுடன் (ஈரப்பசை நீங்கியவுடன்) ரிப்பன் மாதிரி நீள நீளமாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தளபதி நடிக்கும் ஹாலிவுட் படம்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: மோடி வருகை- மூன்றாவது அணிக்கு அச்சாரமா? வேட்பாளர் தேர்வில் எடப்பாடி