update kumaru January 2 2024
இன்னைக்கு விஜய் ரசிகர் ஒருத்தர சந்திச்சேன்…”என்ன நண்பா, நியூ இயர்லாம் எப்படி போச்சுன்னு” வழக்கமான விசாரிப்புக்கு பிறகு, “தளபதி படம் அப்டேட்லாம் வந்துருச்சு போலனு” அவருகிட்ட கேட்டேன்…
“பின்ன தளபதின்னா சும்மாவா…ஸ்டில்ஸ்லாம் பார்த்தீங்களா செம்ம மாஸா இருக்குல்லன்னு…” சொன்னாப்ல
“ஆமாமா…ஆனா அந்த டைட்டில் தான் கொஞ்சம்… தமிழ்ல்ல வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்லனு” அவருக்கிட்ட சொன்னேன்
அதுக்கு அவரு “தளபதியோட லெவல்லே இப்போல்லாம் வேற நண்பா…அவரெல்லாம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போயிட்டாப்ல…அதான் இங்லீஷ் டைட்டில் வச்சிருக்கோம் தெரியும்லன்னு…” ஒரு போடு போட்டாப்ள…
“நீங்க நடத்துங்க நண்பான்னு” சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் – ரிசர்வ் வங்கி
புரிஞ்சு போச்சு தேர்தல் வரை செல்லும் அதான
balebalu
10 ஆண்டுகளில் இந்தியா சாதித்ததை கூறுங்கள்: கருத்து கேட்கிறார் பிரதமர்
கை தட்டுவதையும் , விளக்கு ஏற்றுவதையும் சாதனை லிஸ்ட்ல சேர்க்கலாமா ஆபீசர்
அடிச்சு புடிச்சு கொடுக்கிற இடத்துல எல்லாத்துலயும் காலண்டர் வாங்க வேண்டியது அதை கிழிக்காம அப்படியே வச்சிருந்து அடுத்த வருஷம் தூக்கி போட வேண்டியது…! அப்படி என்னதான் வியாதியோ…!!
யாரு இவரா நாட்டோட தலைவர்?
மணிப்பூர் பிரச்சினைக்கு வரச்சொன்னா, வந்தேபாரத்க்கு போயி கொடி ஆட்டிட்டு இருப்பாரு,
தூத்துக்குடி வெள்ளத்துக்கு வருவார்னு எதிர்பார்த்தா திருச்சில போட்டோ எடுக்க கிளம்பி வருவாரு..
ச ப் பா ணி
எனது மாணவ குடும்பமே
ஐயா ஒவ்வொரு குடும்பத்துக்கு இன்னும் அந்த பத்து இலட்சம் அக்கவுண்டுக்கு வரல
மயக்குநன்
திமுக அமைச்சரவையில் 33 சதவீத அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது!- அண்ணாமலை.
100 சதவீத தூய்மையானவர்கள் உள்ள ஒரே கட்சி பாஜக மட்டும்தான் ஆபீசர்..!
மயக்குநன்
தமிழக மக்களைக் காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருக்கிறது!- சசிகலா.
இதைத்தான் சசி’கலாய்’னு சொல்லுறது..!
ℳsd இதயவன்
10 ஆண்டுகளில் இந்தியா சாதித்ததை கூறுங்கள்: கருத்து கேட்கிறார் பிரதமர் மோடி ~
10 ஆண்டு ஆட்சியில் இருந்த உங்களுக்கே தெரியலைனா எங்களுக்கு மட்டும் என்ன தெரியும் ஜி ?
ℳsd இதயவன்
டூ 2024~ எப்ப முடியுவ?
2024 ~ கொஞ்சம் பொறுப்பா 364 நாள் தங்கி இருந்து சிறப்பா செஞ்சிட்டு போவேன்?!
Sasikumar J
அடிச்சு புடிச்சு கொடுக்கிற இடத்துல எல்லாத்துலயும் காலண்டர் வாங்க வேண்டியது அதை கிழிக்காம அப்படியே வச்சிருந்து அடுத்த வருஷம் தூக்கி போட வேண்டியது…!
அப்படி என்னதான் வியாதியோ…!!
balebalu
மழை, வெள்ளத்தால் தமிழக மக்கள் வலிகளை அனுபவித்தீர்கள் : திருச்சியில் பிரதமர் வேதனை –
வேதனையை வெறுமனே வாயால் சொன்னால் எப்படி
நிவாரணா நிதியா அள்ளி கொடுத்தீங்கன்னா தாராளமா வாங்கிக்குவோம்
தர்மஅடி தர்மலிங்கம்
கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரமே இல்லை! – எடப்பாடி பழனிசாமி!
அதானே… மத்திய அரசுக்கு நிதி கேட்டு எத்தனை முறை அழுத்தம் நீங்க கொடுத்துருப்பீங்க.?!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லட்சத்தீவில் மோடி : பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸ்!
அரசு கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களில் 8 மணி நேரமாக தொடரும் ஐடி ரெய்டு!
update kumaru January 2 2024