பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது?

Published On:

| By Selvam

What is the right exercise for your age

ஆண் – பெண், வயது, உடலின் தன்மை, தேவை ஆகிய நான்கின் அடிப்படையில்தான் யார், என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை உடற்பயிற்சியாளர்கள் தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில் உங்கள் வயதுக்கேற்ற உடற்பயிற்சி எது? What is the right exercise for your age

9 – 15 வயதுள்ளவர்கள்

ரன்னிங், டென்னிஸ், ஃபுட்பால், வாலிபால் போன்ற விளையாட்டு சார்ந்த பயிற்சிகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். அதிக எடையைத் தூக்கக் கூடாது. இந்த வயதில் எலும்புகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும் என்பதால், அதிக எடையைத் தூக்கினால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

15 – 40 வயதுள்ளவர்கள்

இந்த வயதுப் பிரிவினர் ஜாகிங், வாக்கிங், ட்ரெட்மில், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகளுடன் தசை நெகிழ்ச்சியடைவதற்காகச் செய்யப்படும் ஃப்ளெக்ஸிபிளிட்டி பயிற்சிகளான ஸ்ட்ரெச்சிங், யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

40 – 60 வயதுள்ளவர்கள்

இவர்கள் வாக்கிங் செல்லவேண்டியது மிக அவசியம். ரன்னிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஸ்விம்மிங் செய்யலாம். குறைந்த எடை கொண்ட பளு தூக்கும் பயிற்சிகளைச் செய்யலாம்.

யோகா போன்ற ஃப்ளெக்ஸிபிளிட்டி பயிற்சிகளைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அனைத்துப் பயிற்சிகளையுமே மருத்துவரின் ஆலோசனையுடன் செய்வது நல்லது.

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்

60 வயதைக் கடந்தவர்களுக்குத் தசைகள் வலுவிழந்து போதல், மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அவர்கள் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டியது அவசியம்.

அதனால், பேலன்ஸ் எக்சர்சைஸ்தான் முதன்மையானதாக இருக்க வேண்டும். வாக்கிங் சென்றாலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நடக்க வேண்டாம்.

இதயத் துடிப்பின் அளவைக் கணக்கில்கொண்டு, நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். வெயிட் லிஃப்டிங்கை கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.

வாரத்தின் ஏழு நாள்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாள்கள் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். ஐந்து முதல் ஆறு நாள்கள் தினமும் குறைந்தது 30-லிருந்து 40 நிமிடங்கள்  செய்ய வேண்டும். இதுவே போதுமானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கேரளா வெற்றி கழகமா? : அப்டேட் குமாரு

உரிமை கோரப்படாத சடலங்கள் மூலம் கேரள அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத்துறையில் பணி!

பொருள் உற்பத்தியில் தற்சார்பு… நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share