துபாய் ரிட்டர்ன் மகன்… ஆனந்த கண்ணீரில் தாய்: வீடியோ வைரல்!

டிரெண்டிங்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கங்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா. இவரது மகன் ரோகித். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று வேலை செய்து வந்துள்ளார். சுமித்ரா கங்கொல்லி மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில்  தாய் மற்றும் உறவினர்கள் என யாருக்கும் தகவல் கொடுக்காமல் செப்டம்பர் 21 ஆம் தேதி திடீரென ஊருக்கு வந்துள்ளார். ரோகித் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது தாய் வியாபாரம் செய்வதற்காக மீன் மார்க்கெட்டிற்கு சென்று விட்டார்.

இதனை அறிந்து கொண்ட ரோகித் கங்கொல்லி மீன் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முகம் தெரியாதபடி கைக்குட்டையால் மூடிக் கொண்டு, தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு மீன் விற்றுக் கொண்டிருந்த தனது தாயிடம் சென்றுள்ளார்.

அங்கு சென்ற ரோகித் வாடிக்கையாளர் போன்று மீன் விலைகளை விசாரித்து பேரம் பேசியுள்ளார். சுமித்ராவும் மீனின் விலையை சொல்லிக் கொண்டே மீன்களை எடுத்து கவரில் போட்டுக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து ரோகித் பேரம் பேசிக் கொண்டே இருந்ததால் சுமித்ரா ரோகித்தின் குரலை அடையாளம் கண்டு பிடித்துவிட்டார். பின்னர் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் ரோகித்தின் தொப்பி மற்றும் முகத்தில் அணிந்திருந்த கைக்குட்டையை அகற்றியுள்ளார் தாய் சுமித்ரா.

மூன்று  ஆண்டுகளுக்கு பின் மகனை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் சிறிது நேரம் உறைந்து நின்ற சுமித்ரா, பின்னர் ஆனந்த கண்ணீருடன் மகனை கட்டி அணைத்துக்கொண்டார்.

இதனை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மகனின் குரலை மட்டும் வைத்து தாய் அடையாளம் கண்டு  கொண்ட மகிழ்ச்சியில் கட்டித்தழுவிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

அண்ணாமலை பேசுவது ஜமக்காலத்தில்‌ வடிகட்டிய பொய்‌: துரைமுருகன்

உங்க ஊர்ல அடிப்படை பிரச்சினையா? உடனே தீர்க்க ’ஊராட்சி மணி’க்கு போன் பண்ணுங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *