எம்.ஜி.ஆர் அணிந்திருப்பது போன்ற தொப்பியையும், கண்ணாடியையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் தொண்டர்கள் மாட்டிவிட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட மார்ச் 18-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 28 ) தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். அப்போது, அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் அணிந்திருப்பது போன்ற தொப்பியையும், கண்ணாடியையும் தொண்டர்கள் அவருக்கு மாட்டிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் அதனை அணிந்துகொண்டார்.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதிமுக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் “எங்களின் சின்ன எம்.ஜி.ஆரே” என்று பதிவிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்த சாவர்க்கர் பேரன்!
”அவர் பாராட்டியதே இந்தளவுக்கு உயர காரணம்”: சச்சின்
Most of the people dis like EPS
God only save ADMK