ஆப்பிள் நிறுவனமானது Scary Fast நிகழ்விற்கான அழைப்பிதழை வெளியிட்டிருந்தது அதில் அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தது. அதாவது இந்திய நேரப்படி அக்டோபர் 31 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு தொடங்கும்.
அமெரிக்காவில் Scary Fast நிகழ்சியானது நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இன்று காலை 6:30 மணி முதல் ஆப்பிள்.காம், யூட்யூப் மற்றும் லைட் ஸ்ட்ரீமிங் வழியாக காண முடியும்.
கசிந்த சில தகவல்களின் படி இந்த நிகழ்சியில் மேக் புக் மற்றும் ஐமேக்குகளை அறிமுகப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
அவற்றில் M3 சிப் இடம்பெறும் என்றும் இவை 2023 ஜனவரியில் ஆப்பிள் அறிமுகப்படுத்திய M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் சிப்களை விட வேகமானது மற்றும் திறன் மிக்கது.
புதிய மேக் ஆனது மெல்லிய bezels, மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
M3 சிப் உடன் கூடிய 24 இன்ச் ஐமேக், 14 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
24 இன்ச் ஐமேக் 2021-ல் அறிமுகப்படுத்திய ஐமேக்கின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாக இருக்கலாம், நேர்த்தியான வடிவமைப்பு, 4.5k ரெடினா டிஸ்ப்ளே மற்றும் டச் ஐடியுடன் கூடிய மேஜிக் கீபோர்டு இடம்பெறலாம்.
14 இன்ச் மேக்புக் ப்ரோ ஆனது மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் 2023 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்புக் ப்ரோவை விட மேம்படுத்தப்பட்ட Magsafe சார்ஜிங் போர்டு மற்றும் HDMI போர்டு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ பெரிய மேக்புக் ப்ரோ மாடலைப் போலவே இருக்கலாம்,
மினி எல்இடி டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் 14 இன்ச் மேக்புக் ப்ரோவை போலவே இருக்கலாம் கூடுதலாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மட்டும் மாறுபடலாம்.
புதிய மேக்குகளுக்கு கூடுதலாக USB-C மேஜிக் கீபோர்டு, மேஜிக் மவுஸ் வித் க்போர்ஸ் போன்றவை இடம் பெறலாம்.
இவை அனைத்துமே வெளிவந்த தகவல்கள் மற்றும் யூகங்கள் அடிப்படையே.
புதிய அறிமுகங்கள் பற்றிய தகவல்கள் எதையும் ஆப்பிள் நிறுவன்ம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த அனைத்து சஸ்பன்ஸ்களுக்கும் இன்னும் சில மணி நேரத்தில் விடை தெரிநது விடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாட்ஸ் அப் WEB பயன்படுத்துவதிலும் மோசடியா? பயனர்களை எச்சரிக்கும் நிபுணர்கள்!
கிச்சன் கீர்த்தனா: பின்வீல் சமோசா