பாம்பு ஒன்று வித்தியாசமான முறையில் மரத்தில் ஏறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு ஒவ்வொரு உயிரினங்களும் வெவ்வேறு முறைகளை பயன்படுத்தும்.
அதன்படி மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்கின்றனர், விலங்குகள் நான்கு கால்களிலும், பறவைகள் தங்களின் இறக்கைகளையும் பயன்படுத்துகின்றன.
அதேபோல் பூரான் (Centipedes) போன்ற உயிரினங்களுக்கு பல கால்கள் உள்ளன. அவை அதை பயன்படுத்தி ஊர்ந்து செல்லும்.
பாம்புகளைப் பற்றி பேசுகையில் , அவற்றுக்கு கால்கள் இல்லை. முழு உடலையும் இழுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும். அதனால்தான் பாம்புகள் ஊர்ந்து செல்லும் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பாம்பு ஒன்று மரத்தில் வித்தியாசமான முறையில் ஏறும் வீடியோ காட்சி ஒன்று தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் “ இந்த பாம்பு மிகவும் புத்திசாலியா இருக்கும்போல” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் “இது உண்மையிலேயே பாம்பு தானா” என்று பதிவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
போரில் ரஷ்யாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினின் நிலை என்ன?