Are you headache balm addict

ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் தைலம் தடவும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

டிரெண்டிங்

சிலர் தலைவலி இல்லையென்றாலும் வலிக்கான தைலங்களை நெற்றியில் தடவிக் கொள்வார்கள். அப்படிச் செய்தால்தான் தூக்கம் வருகிறது என்று சொல்லி, தினமும் பயன்படுத்துவார்கள்.

அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மனநல மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் இதோ…

“இந்தத் தைலங்கள் வித்தியாச மணம் கொண்டவை, அந்த மணமானது இதமான உணர்வைத் தரும். ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகளைப் போக்கும், வலிகளைப் போக்கும், நெற்றிப் பகுதியில் தடவுவதன் மூலம் மூக்கின் வழியே உள்ளே போய், நெஞ்சு சளியைப் போக்கும் என்றெல்லாம் காலம் காலமாக பலமாக நம்பப்படுகிறது.

இந்த மணம் ஏற்படுத்தும் உணர்வை உளவியலில் ‘கண்டிஷனிங்’ (Conditioning) என்று குறிப்பிடுவோம்.

பல வீடுகளிலும் ஒருவர் இப்படி தைலத்தைத் தடவிக்கொண்டதும், வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்டவருக்கு உடல்நலம் சரியில்லை, ஓய்வெடுக்க நினைக்கிறார் என புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.

வீட்டு வேலை, வெளி வேலைகளைப் பார்த்துக் களைத்துப்போன பெண்களுக்கும், இப்படி ஒரு தைலத்தைத் தடவிக்கொண்டதும் ‘ வேலை செய்தது போதும்… ஓய்வெடு’ என உளவியல்ரீதியான ஓர் உணர்வு ஏற்படுகிறது. `டு நாட் டிஸ்டர்ப் மீ’ என்று மறைமுகமாக மற்றவர்களுக்கு உணர்த்தும் உளவியல் தான் இது.

அந்தத் தருணங்களில் அவர்களுக்கு தலைவலியோ, ஜலதோஷமோ இருக்க வேண்டும் என்றில்லை. தைலத்தைத் தடவிக்கொண்டு படுத்ததுமே அவர்களுக்கு உடல் ரிலாக்ஸ் ஆகி, தலைவலி போவதாக உணர்கிறார்கள். Are you headache balm addict

பெரும்பாலானவர்களுக்கும் ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் ஏற்படுத்தும் தலைவலிகளே பிரதானமானவை. அதை கவனிக்காமல் விடும்போதுதான் வலி அதிகமாகி, அடுத்தகட்டத்துக்குப் போகிறது. லேசான டென்ஷனாக உணரும்போதே இப்படி தைலத்தைத் தடவிக்கொள்வதால் டென்ஷன் விடுபடுவதாக உணர்கிறார்கள்.

இந்தப் பழக்கத்தால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. அதற்காக இப்படி தைலத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருப்பது ஒரு பழக்கமாகவே மாறி, அதிலிருந்து விடுபட முடியாமல் போகும் ஆபத்து இருப்பதை உணர வேண்டும்.

இத்தகைய பழக்கத்தை தொடர்வதும் நல்லதல்ல. அத்துடன், சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்களுக்கு இந்தத் தைலங்களும் களிம்புகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கு இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி..  நல்லதா? கெட்டதா?

ரஷ்ய போர்க் கப்பலை அழித்த உக்ரைன் ராணுவம்!

கிச்சன் கீர்த்தனா: பிரெட் தவா பீட்சா

தனித்துப் போட்டியா? : தந்தையின் பேச்சுக்கு உமர் அப்துல்லா மறுப்பு!

Are you headache balm addict

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *