ஒரே ஆர்டர் ஸ்விகியை திரும்பி பார்க்க வைத்த பெங்களூர் வாடிக்கையாளர்!

டிரெண்டிங்

பெங்களூரைச்சேர்ந்த ஒருவர் ஸ்விகியில் ஒரே ஆர்டராக ரூ.75,378 க்கு உணவு வாங்கிய தகவலை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உணவு சமைத்து சாப்பிடுவதை விட ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுவதையே விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை நியமனம் செய்து சேவைகளை வழங்கி வருகிறது.

அதேநேரம், இது சோம்பேறித்தனம் என்றும் இவ்வாறு ஆர்டர் செய்து சாப்பிடுவது தவறு என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் தான் ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விகி இந்த ஆண்டு தனது நிறுவனம் பெற்ற ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2022ம் ஆண்டுக்கான ஸ்விகியின் மிகப்பெரிய சிங்கிள் ஆர்டர் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிங்கிள் ஆர்டர் பெங்களூரில் இருந்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் வந்த தீபாவளியன்று சிங்கிள் ஆர்டராக பெங்களூரில் உள்ள நபர் பல்வேறு வகையான உணவுகளை ரூ.75,378க்கு ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விகி நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக புனேவைச் சேர்ந்த இன்னொரு வாடிக்கையாளர் சிங்கிள் ஆர்டராக ரூ.71,229க்கு உணவு வாங்கி உள்ளார்.

மேலும் ’ஸ்விகி ஒன்’ சேவை மூலம் பெங்களூரில் வசித்து வருபவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். ஸ்விகி ஒன் என்பது அந்த உணவு டெலிவரி நிறுவனம் வழங்கும் ஒருவகை சந்தா திட்டமாகும். இதன்மூலம் இலவச டெலிவரி, கட்டண சலுகை உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

அதன்படி ஸ்விகி ஒன் மூலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர். இந்த பட்டியலில் 2வது இடத்தில் மும்பை, 3வது இடத்தில் ஹைதராபாத், 4வது இடத்தில் டெல்லி உள்ளது. தனிநபராக அதிகம் சேமித்ததில் முதல் நபராக டெல்லியை சேர்ந்தவர் உள்ளார். இவர் மட்டும் அதிகபட்சமாக ரூ.2.48 லட்சம் வரை சேமித்துள்ளார்.

அதோடு 2022ல் இந்தியர்கள் ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகளை ஆர்டர்கள் செய்து முதலிடத்தில் உள்ளனர். அதன்படி வினாடிக்கு 2.28 என்ற அளவில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2021ல் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணிகள் ஆர்டர்கள் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிரியாணி மீதான மோகம் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் பிரியாணிக்கு அடுத்ததாக மசாலா தோசை 2வது இடத்தை பிடித்துள்ளது. 3வது இடத்தில் சிக்கன் ப்ரைட் ரைஸ் பிடித்துள்ளது. ஸ்நாக்ஸ் பட்டியலை பொறுத்தமட்டில் 4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) ஆர்டர்களுடன் சமோசா முதலிடம் பிடித்துள்ளது.

இறைச்சியை பொறுத்தமட்டில் 29.86 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களில் சிக்கன் முதலிடத்தில் உள்ளது. மேலும் இறைச்சியை விரும்பி உண்ணும் நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதலிடத்திலும், 2வது இடத்தில் ஹைதராபாத்தும், சென்னை 3வது இடத்திலும் உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முதல் டெஸ்ட் போட்டி: முன்னிலையில் இந்தியா!

20ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை!

+1
0
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.