பட்ஜெட் விலையில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!

டிரெண்டிங்

டெக்னோ சீனாவின் சேன்சேனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் (Tecno Pop 6 Pro) புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் டெக்னோ பாப் 6 ப்ரோ மாடலை அந்த நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்திய மதிப்பில் 8,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ளது.

பீஸ்புல் புளு மற்றும் போலார் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ளது.

Tecno Pop 6 Pro

ஆண்ட்ராய்டு 12 தொழில்நுட்பத்துடன் 6.6 இஞ்ச் ஹெச்.டி.பிளஸ் தொடுதிரை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

3 ஜிபி ரேம் கொண்ட இந்த (Tecno Pop 6 Pro is a budget smartphone) ஸ்மார்ட்போனில் 32 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை, ப்ளுடூத், எஃப்.எம், ஒடிஜி சப்போர்ட், பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

40% கமிஷன்: பாஜக முதல்வருக்கு எதிராக நூதன போராட்டம்!

ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.