Scam in wahtsapp web

வாட்ஸ் அப் WEB பயன்படுத்துவதிலும் மோசடியா? பயனர்களை எச்சரிக்கும் நிபுணர்கள்!

டிரெண்டிங்

தொழில்நுட்பம் வளர வளர அதில் இருக்கும் சாதகங்களை காட்டிலும் பாதங்கள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும், தினசரி மக்களின் தகவல் பரிமாற்றத்துக்கு முக்கிய பயன்பாடாக இருக்கும் வாட்ஸ் அப் செயலி மூலம் பரவும் வதந்திகள், பொய்ச் செய்திகள் குறிப்பாக மோசடிகள் எண்ணிலடங்காமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் செயலியை லேப்டாப் அல்லது கணினியில் வாட்ஸ் அப் வெப் மூலம் பயன்படுத்தும் போது நடைபெறும் பல்வேறு மோசடிகள் குறித்து டெக் நிபுணர்கள் பகீர் தரவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

வாட்ஸ் அப்பை டெஸ்க்டாப் வெர்சன்களில் பயன்படுத்தும் போது போலியான வாட்ஸ் அப் வெப் இணைப்பின் மூலம் பயன்படுத்துவதால் ஸ்கேமர்களின் ஊடுறுவல் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் வாட்ஸ் அப் வெப் பக்கத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வமற்ற இணைப்பை பயன்படுத்திய பலரது தரவுகள் திருடப்பட்டு அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயல்களில் சில மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது.

இந்த வகையான மோசடி விரைவில் இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் பரவலாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபோக, பயனர்கள் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமே அறியாத அளவுக்கு கண்ணுக்கே தெரியாமல் இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இது மாதிரியான மோசடிகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான் என டெக் நிபுணர்கள் சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, வாட்ஸ் அப் செயலியை டெஸ்க்டாப் வெர்ஷனில் பயன்படுத்தும் போது, அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்க இணைப்பின் மூலம் மட்டுமே ஸ்கேன் செய்து உள் நுழைய வேண்டுமாம்.

அதேபோல, வாட்ஸ் அப் செயலியின் two step verification என்ற கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை பயனர்கள் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுபோக, வாட்ஸ் அப் கணக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலோ அல்லது கணினிகளிலோ இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் தவறாமல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பவித்ரா

டெல்லி முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு : சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *