hair fall differece between normal and abnormal

பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வு – எது நார்மல்… எது அப்நார்மல்?

டிரெண்டிங்

இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, முடி உதிர்வு. சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும், திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவிதமான எண்ணெய் வகைகள் , ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள்.

“முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், பருவகால மாற்றம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை ஆங்கிலத்தில் ‘சீசனல் ஹேர்ஃபால்’ என்று சொல்வார்கள். மழைக்காலங்களில் காற்றில் உள்ள கூடுதலான ஹைட்ரஜனை கிரகித்துக்கொண்டு தலை முழுக்க வறட்சி ஏற்பட்டு முடி உதிரும்.

அதேபோல வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு கால மாற்றத்தின் போதும் முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சிலருக்கு இது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

பொதுவாக நமது கூந்தல், வளரும் கட்டம் (growth phase) தலையில் தங்கும் கட்டம் (resting phase), உதிரும் கட்டம் (falling phase) என மூன்று சுழற்சி கட்டங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நூறு நாள்களுக்கும் இந்தச் சுழற்சி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்தச் சுழற்சி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடைக் காலத்தில் தொடங்குகிறது. ஏனெனில் அதிக வியர்வை தலையிலேயே தங்கி அந்த ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதால் முடி உதிரும் பிரச்சினை ஏற்படும். குளிர்காலத்தில் முடி உடையும் பிரச்சினை அதிகமாக இருக்கும். அதுவே நமக்கு முடி அதிகமாக உதிர்வது போலவும் தோன்றலாம். அத்துடன், நாம் அடிக்கடி தலைக்கு குளிக்கும்போது, தலை மற்றும் முடியில் வறட்சி உண்டாகும். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள குளோரின், உப்பு போன்றவையும் நம் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

பருவகால முடி உதிர்வு‌ என்றாலும், ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை கொட்டுவது இயல்பானது. அதற்கும் மேல் முடி உதிர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். முடியின் வேர்களில் ஏற்படும் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மற்றும் வைட்டமின் சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் முடி அதிகமாக உதிரும்.

மைல்டான ஷாம்பூக்கள் மற்றும் நல்ல கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். குளிப்பதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்து ஹேர் வாஷ் செய்வது நல்லது. நீண்ட நேரத்திற்கு அந்த எண்ணெயோடு இருக்காமல் 10 முதல் 15 நிமிடத்திற்குள் ஹேர் வாஷ் செய்து விட வேண்டும்.

தலைமுடி புரதத்தால் ஆனது. அதனால் உதிர்வைத் தடுப்பதற்கு புரதம் நிறைந்த உணவு முறையைப் பின்பற்றுவது மிகச் சிறந்த வழி. முட்டை, பச்சைப்பயிறு, பனீர், சிக்கன், சன்னா , பருப்பு வகைகள் இவற்றை நம் உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கேரட், நீர்ச்சத்துள்ள பழங்கள், பப்பாளி மற்றும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

வெளியே செல்லும்போது தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெளியே இருக்கும் தூசு நம் தலையில் தங்கி அதுவே பொடுகு அதிகமாக உருவாகக் காரணமாகிவிடும். அதேபோல் துணியால் தலைமுடியை முழுதாக மூடிக்கொள்வது நல்லது. அது வெயில், காற்று, தூசு என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், நம் கூந்தலைப் பாதுகாக்க உதவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

அதிகரிக்கும் தங்கம் கடத்தல்: காரணம் என்ன?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *