திருச்சி அருகே அரசு பேருந்து சாலை விபத்தில் சிக்கியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல் கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது.
இதில் அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படும் நிலையில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 20 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியா
செந்தில் பாலாஜி கைது ஏன்?: அமலாக்கத் துறை விளக்கம்!
செந்தில் பாலாஜி வழக்கு: காவலை எதிர்த்து பிரமாணப் பத்திரம் தாக்கல்!