தீபாவளியை முன்னிட்டு 6 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Diwali special bus departing places
இந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலில் சிக்காமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பேருந்து புறப்படும் நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம்
சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.
தாம்பரம் சானடோரியம்
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அரசு விரைவுப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி பணிமனை
பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி மாநகரப் பேருந்து பணிமனை அருகிலிருந்து புறப்படும்.
கே.கே. நகர் பேருந்து நிலையம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கே.கே. நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
தாம்பரம் பேருந்து நிறுத்தம்
திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் 9,467 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Diwali special bus departing places
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தொகுதி மாறுகிறேனா? திருமா பதில்!
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு!