சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாய்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (ஆஅகஸ்ட் 29) சென்னை குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன், 750 மிமீ விட்டமுள்ள மற்றொரு பிரதான உந்து குழாயை இணைக்கும் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்படுவதால் 31.08.2023 மாலை 7 மணி முதல் 01.09.2023 பிற்பகல் 3 மணி வரை,
தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், தி.நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்த பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற https://cmwssb.tn.gov.in/ta என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ளலாம்.
பிரியா
என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதா? : வரலட்சுமி விளக்கம்!
கடலூரில் பாமக பொதுக்கூட்டம் : நீதிமன்றம் மறுப்பு!