காலையில் சாப்பிட மிகச்சிறந்த உணவு இந்த பெசரட். இரும்புச்சத்து வைட்டமின் ஏ, புரதச்சத்து, அமினோஅமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அனைவருமே சாப்பிடலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படலாம்.
என்ன தேவை?
பச்சரிசி – 2 கப்
பச்சைப் பயறு – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெந்தயம், அரிசி, பயறு ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு, தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் பயறு தோசை வார்த்து, மேலே வெங்காயம், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் தூவி, வெந்ததும் பரிமாறவும்.
ஜவ்வரிசி – புளி உப்புமா கொழுக்கட்டை