நடிகர் விஜய்யின் “GOAT” படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து உருவாக இருக்கும் 26 ஆவது படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார்.
“ஓ மை கடவுளே” என்ற பேண்டஸி லவ் ஸ்டோரி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து, அதை தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன “ஒரி தேவுடா” (Ori Devuda) படத்தையும் இயக்கினார்.
தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதனின் காலேஜ் சீனியர் என்பதால் அதனை அடிப்படையாகக் கொண்டு அஸ்வத் முதன் முதலில் பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுத்த குறும்படத்தை நினைத்துப் பார்த்து பிரதீப் ரங்கநாதன் தனது வாழ்க்கை அனுபவங்களை விவரிப்பது போல இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26 ஆவது படத்திற்கு “டிராகன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பை முன்னிட்டு படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் fire ஆ தானா டைட்டில் கேட்டீங்க.. ready go என்று கூற, அர்ச்சனா தன் முன் உள்ள ஒரு button- ஐ press செய்த உடன் அவர்களின் எதிரே நெருப்பு எரிந்து படத்தின் தலைப்பு வெளிவருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
#DRAGON 🐉
டிராகன்
డ్రాగన్@Ags_production @Dir_Ashwath#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi pic.twitter.com/7gQJwihMnl— Pradeep Ranganathan (@pradeeponelife) May 5, 2024
கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிராகன் படத்திற்கு முன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்து வரும் LIC படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா