வாத்தி இசை வெளியீட்டு விழா: முறுக்கு மீசை, தாடியுடன் கெத்து காட்டிய தனுஷ்
தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி 4 ) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள ’வாத்தி’ என்ற படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை சம்யுக்தா. மேலும், சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
வாத்தி திரைப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 4 ) இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
வாத்தி இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் தனுஷ் முறுக்கு மீசை தாடியுடன், வேஷ்டி சட்டையில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் வருகை தந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவது எங்கள் வேலை அல்ல! : மத்திய அமைச்சர்
நெரிசலில் சிக்கி பலியான பெண்கள்: நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்