qகிச்சன் கீர்த்தனா: சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

public

கிறிஸ்துமஸை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்கின்ற நிலையில் கேக்குக்கு அடுத்த நிலையில் அனைவராலும் விரும்பப்படுவது குக்கீஸ். இது உலகின் எல்லா நாடுகளிலுமே பரவலாகக் கிடைக்கக்கூடிய, மிக அதிக நபர்களால் விரும்பி உண்ணக்கூடியது. புகழ்பெற்ற கடைகளில் கிடைப்பது போன்ற அழகுத் தோற்றம் கொண்ட ருசியான குக்கீஸ் வகைகளை வீட்டிலேயே செய்ய முடியுமா? ஈஸியாகச் செய்ய முடியும் என்பதற்குச் சான்றுதான் இந்த சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்.

**என்ன தேவை?**

மைதா மாவு – 65 கிராம்

ஐசிங் சுகர் – 30 கிராம்

மார்கரின் ஜி.எஸ்.எம் – 30 கிராம்

உப்பில்லாத வெண்ணெய் – 20 கிராம்

பால் பவுடர் – 5 கிராம் (அ) ஒரு டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – 5 மில்லி

சாக்கோ சிப்ஸ் – 10 கிராம்

கோகோ பவுடர் – 2.5 கிராம் (அ) அரை டீஸ்பூன்

முட்டை (விரும்பினால்) – 1/3

பேக்கிங் பவுடர் – 2 கிராம்

அலங்கரிக்க:

சாக்கோ சிப்ஸ் – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

அவனை 150 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பால் பவுடர் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெயுடன் ஜி.எஸ்.எம் சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு, அதனுடன் ஐசிங் சுகர் சேர்த்துக் கலக்கவும். மைதா மாவு கலவையுடன் உடைத்த முட்டையைச் சேர்த்து அடிக்கவும். அதனுடன் வெனிலா எசென்ஸ், வெண்ணெய் கலவை, கோகோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு மாவுக் கலவையை உருட்டி, 5 – 7 கிராம் எடையுள்ள சிறிய உருண்டைகளாக்கவும். இந்த உருண்டைகள்மீது சிறிதளவு சாக்கோ சிப்ஸ் தூவி பேக்கிங் ட்ரேயில் அடுக்கி பிரீஹீட் செய்த அவனுள் வைத்து 15 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். சிறிது நேரம் ஆறிய பிறகு மொறுமொறுப்பாக இருக்கும்.

[நேற்றைய ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கேக் டிப்ஸ்](https://www.minnambalam.com/k/2019/12/29/13)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *