பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 04.03.2024 முதல் 25.03.2024 வரை நடைபெற்றது.
8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று (மே 14) காலை வெளியிட்டது.
அதன்படி பிளஸ் 1 பொதுத் தேர்வில் 7,39,539 (91.17%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவியர் 4,04,143 (94.69%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,35,396 (87.26%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,76,844. தேர்ச்சி பெற்றோர் 7,06,413. தேர்ச்சி சதவிகிதம் 90.93%
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 0.24% தேர்ச்சி அதிகரித்திருக்கிறது.
தேர்வு எழுதியவர்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,418 ஆகும்.
பாடவாரியாக 100/100 பெற்றவர்கள்
தமிழ் – 8
ஆங்கிலம் – 13
இயற்பியல் – 696
வேதியியல் – 493
உயிரியல் – 171
கணிதம் – 779
விலங்கியல் – 29
வணிகவியல் – 620
கணக்கு பதிவியல் – 415
பொருளியல் – 741
கணினிப் பயன்பாடு – 288
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 293
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முடிவுக்கு வந்த 11 வருட மணவாழ்க்கை… ஜிவி – சைந்தவி அறிவிப்பு!
பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி மறைவு : யார் இவர் – பொலிட்டிகல் டைம்லைன்!