முடிவுக்கு வந்த 11 வருட மணவாழ்க்கை… ஜிவி – சைந்தவி அறிவிப்பு!

சினிமா

திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜிவி பிரகாஷ் – சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் கிரீடம், அங்காடித் தெரு, மதராஸப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, ராஜாராணி, சூரரைப்போற்று என பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பிஸியாக இருக்கிறார்.

அதுபோன்று தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி சைந்தவி. ஜி.வி.பிரகாஷ் இசையில் ’எள்ளுவய பூக்கலையே’, ‘பிறைதேடும் இரவிலே’, ‘கையிலே ஆகாசம்’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவர்கள் இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். பின்னர் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அன்வி என குழந்தைக்கு பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

Imageஇந்தசூழலில், கடந்த இரு நாட்களாகவே ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதி பிரியப்போவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், இதனை நேற்றிரவு இருவரும் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தனிதனியே ட்வீட் செய்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீண்ட யோசனைக்கு பிறகு நானும் சைந்தவியும் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களது 11 ஆண்டு திருமண உறவில் இருந்து பிரிகிறோம்.

மன அமைதி மற்றும் எங்களது முன்னேற்றத்திற்காகவும் இந்த முடிவுவை எடுத்துள்ளோம். இருந்தாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை அப்படியே தொடரும்.

இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய தனியுரிமையை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி மறைவு : யார் இவர் – பொலிட்டிகல் டைம்லைன்!

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 6 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் யார்?

+1
0
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *