mராஜேந்திர சோழனுக்கு கம்போடியாவில் சிலை!

public

ராஜேந்திர சோழனுக்கு கம்போடியாவில் சிலை அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பன்னாட்டுத் தமிழர் நடுவத்தைச் சேர்ந்தவர்களுடன் கம்போடிய அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் தஞ்சாவூர், சிதம்பரம், மாமல்லபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் கடந்த ஐந்து நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கம்போடிய அரசர்களுக்கும் பல்லவ, சோழ அரசர்களுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கம்போடிய அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும், பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலமும் நேற்று (ஜூலை 6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, திருக்குறளை கெமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடிய பள்ளிப் பாடங்களில் இணைக்கப்படும் எனவும், ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் கம்போடியாவில் சிலை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய திருத்தணிகாசலம், “கம்போடிய மன்னர்கள் ஒரு தனி ஸ்டைலில் அமருவார்கள் எனவும், தமிழகத்திலுள்ள சிலைகளில் நந்திவர்ம பல்லவன் அதே ஸ்டைலில் அமர்ந்திருப்பதால் அவர் அவர்களது மன்னர்தான் என்று கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், திருக்குறளை கெமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடிய பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜேந்திர சோழன் கம்போடிய மன்னர்களுக்கு உதவி செய்ததால் அவருக்கு சிலை வைக்க பன்னாடுத் தமிழர் நடுவம் திட்டமிட்டால் கம்போடிய மன்னன் இரண்டாம் ஜெயவர்மனோடு சேர்த்து ராஜேந்திர சோழனுக்கும் கம்போடியாவில் சிலை வைத்துக்கொள்ளலாம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சிலைகளின் திறப்பு விழா நடைபெறும். கம்போடிய பள்ளிப் பாடத்திட்டத்தில் சோழ, பல்லவ பேரரசுகளின் வரலாறும் பாடமாக இணைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

**

மேலும் படிக்க

**

**[‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/06/53)**

**[டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/06/82)**

**[‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி](https://minnambalam.com/k/2019/07/06/20)**

**[அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி](https://minnambalam.com/k/2019/07/05/41)**

**[சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!](https://minnambalam.com/k/2019/07/05/39)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *