மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜூலை 4) அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, உதயநிதியின் நண்பரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையில் பேசினார்.

அவர் தன் பேச்சை முடிக்கும்போது, “இந்தியாவிலேயே இளைஞரணி என்ற கட்டமைப்பை வலிமையாக வைத்திருக்கும் கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதில் முப்பதாண்டு காலம் இளைஞரணிக்குத் தலைமை தாங்கி வழி நடத்தியவர் எங்கள் தலைவர் தளபதி அவர்கள். இப்போது எங்கள் திமுக இளைஞரணிக்கு என் இனிய நண்பர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செயலாளராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொல்லி முடித்தார். இதற்கு திமுகவினர் கைதட்டினர். அப்போது முதல்வரும் அவையில் இருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பேச்சுகளுக்கு ஆளும் அதிமுக சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அவை குறிப்பில் இருந்து நீக்கக் கூடசெய்வார்கள். ஆனால் நேற்று சபை முடியும் நேரம் என்பதாலோ என்னவோ உதயநிதி பற்றி அன்பில் மகேஷின் பேச்சுக்கு யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் உதயநிதிக்கு சொல்லப்பட்ட அட்வான்ஸ் வாழ்த்து அவைக் குறிப்பிலும் இடம் பிடித்துவிட்டது.

மேலும் படிக்க

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்!

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


சனி, 6 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon