மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜூலை 2019

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!

150 சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், அண்ணாப் பல்கலைக் கழகம் இடம்பெற்றுள்ளது.

41 ஆண்டுகள் பழமையான அண்ணாப் பல்கலைக்கழகம், சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. இது பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் உயர் படிப்புகளை வழங்குவதுடன், ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

கற்பிக்கும் திறன், ஆசிரியர் – மாணவர் விகிதம், ஆய்வுத் திறன், சர்வதேச ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்காக உலக அளவிலான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் குவாக்ரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம், 2020ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை 2ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 71 முதல் 80 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக் கழகங்களுக்கான பட்டியலில் கவுகாத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), 101 முதல் 150 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக் கழகங்களில் சென்னை - அண்ணாப் பல்கலைக் கழகமும், ஹரியானா மாநிலத்தின் ஜிண்டால் குளோபல் பல்கலைக் கழகமும் இடம்பெற்றுள்ளன.

பல்கலைக்கழகங்களில் சிறந்த ஆய்வு திறன் கொண்ட பல்கலைக்கழகம் என்ற வகையில் அண்ணாப் பல்கலைக்கழகம் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்!

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

வெள்ளி 5 ஜூலை 2019