மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

கடைசி விவசாயி கதையில் ரஜினி நடிக்க மறுத்ததன் பின்னணி வெளியாகியுள்ளது.

காக்கா முட்டை படம் மூலம் கவனம் பெற்றவர் மணிகண்டன். அப்படம் விருதுகளை பெற்றதோடு உலக அளவில் கவனம் ஈர்த்த படமாகும். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய குற்றமே தண்டனை படமும் அரிதான முயற்சியாக பார்க்கப்பட்டது. இவரது இயக்கத்தில் கடைசியாக வந்த விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விவசாயத்தை மையமாக வைத்து கடைசி விவசாயி என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

85 வயதான முதியவர் ஒருவர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கியமான வேடங்களில் விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ‘லுக்’ அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாகியது. இப்படத்தில் அவர் மன நலம் பாதிக்கப்பட்ட விவசாயியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தை இப்படத்திற்காக மணிகண்டன் அனுகியுள்ளாராம். இதனைப் பற்றி கருத்து தெரிவித்த மணிகண்டன் ‘இப்படத்தின் கதையை நான் எழுதி முடித்தவுடனே, இந்த கதை சொல்லும் கருத்து மிகப்பெரியது. எனவே, ரஜினி போன்ற ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் எனக்கருதி அவரிடம் இந்த கதையை கூறினேன். ஆனால், நடிக்க மறுத்துவிட்டார். அது முடிந்து ஒரு வாரத்திலேயே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம் சார்ந்த தீவிரமான கருத்துக்களைக் கொண்ட படமென்பதால், அரசியலில் நுழையும் சமயம் தான் நடிக்கும் போது சர்சைகள் உண்டாகுமென ரஜினிகாந்த் மறுத்திருக்கக்கூடும் என்கிறது திரை வட்டாரங்கள். காலா படப்பிடிப்பு சமயத்திலேயே வெற்றிமாறன் தீவிரமான அரசியல் பேசும் திரைக்கதையை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். திரைக்கதை பிடித்திருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக ரஜினிகாந்த் நடிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


சனி, 6 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon