>த்ரில்லரை விடாத வெற்றி

public

8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமான நடிகர் வெற்றி அடுத்ததாக சைக்கோ த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே திரையுலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் படங்களை இந்தத் தலைமுறை இயக்குநர்கள் பலர் இயக்கிவருகின்றனர். ஆனால் பெருவாரியான ரசிகர்களை படம் சென்றடைவதற்கு முன் திரையரங்குகளிலிருந்து படம் வெளியேறிவிடுகிறது. அதே சமயம் ஒரு படத்தில் கவனம் பெற்றவுடன் முன்னணி இயக்குநர்கள், பெரிய பேனர்களில் தயாராகும் படங்களின் பக்கம் நடிகர்கள் திரும்பிவிடுவது வழக்கம். ஆனால் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைக் கொண்டுவரும் அறிமுக இயக்குநர்களின் படங்களிலேயே நடித்துவருகிறார் வெற்றி.

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் அறிமுகமான வெற்றி அந்தப் படத்திற்குப் பின் ஜீவி படத்தில் நடித்தார். வி.ஜே.கோபிநாத் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல்ரீதியாக வரவேற்பு பெறாமல் போனது.

முந்தைய இரு படங்களைப் போலவே வெற்றி தற்போது நடிக்கவுள்ள புதியபடமும் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. ஷியாம், பிரவீன் இணைந்து இயக்கவுள்ளனர். மேக்னா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

படம் குறித்து இயக்குநர்களில் ஒருவரான ஷியாம், “கிராமப்புற பின்னணியில் உருவாகும் இந்தப் படம் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நினைவுகளை இழப்பது தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 45 நாள்களில் நாகர்கோவில், பாலக்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ஃபைஸல் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்திற்கு அஜயன் பாலா திரைக்கதை அமைத்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/08/22/50)**

**[ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!](https://minnambalam.com/k/2019/08/23/18)**

**[டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!](https://minnambalam.com/k/2019/08/22/64)**

**[யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!](https://minnambalam.com/k/2019/08/23/17)**

**[டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!](https://minnambalam.com/k/2019/08/21/62)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *