மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!

யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!

முதல்வர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். 14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழக தொழிலதிபர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதல்வர் கோரிக்கை வைக்க இருக்கிறார். வரும் 28ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர், செப்டம்பர் 7ஆம் தேதிதான் தமிழகம் திரும்ப இருக்கிறார். முதல்வரின் பயணத்துக்குப் பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்த 14 நாட்களுக்கும் முதல்வரின் பொறுப்பை யார் வகிக்கப்போவது என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக இருந்தது. முதல்வருக்கு அடுத்த இடத்தில் துணை முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் கவனிப்பாரா அல்லது முதல்வருக்கு நெருக்கமான தங்கமணி, வேலுமணி இருவரில் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த 19ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் முதல்வரின் பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய முடிவுகள் குறித்து வெளிநாட்டில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்றும், முக்கிய கோப்புகளுக்கு முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்தே பேக்ஸ் வழியே ஒப்புதல் அளிப்பார் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon