மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!

துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின்போது திமுக பொருளாளர் துரைமுருகனும், ரவீந்திரநாத் குமாரும் சந்தித்து பேசினர்.

துரைமுருகனை தலைவராகக் கொண்ட சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று திட்டப் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மதுரையில் நடந்த ஆய்வை முடித்துக்கொண்ட துரைமுருகன் குழு தேனி சென்றது.தேனியில் வைகை அணை, அரண்மனைபுதூர் குடிசை மாற்று வாரியப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், பசுமை வீடுகள், பாலசமுத்திரத்தில் போடப்பட்டுள்ள சாலைகளை ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் துரைமுருகன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. அதில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் ஆர்.நட்ராஜ், பழனிவேல் தியாகராஜன், அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல தேனி மக்களவை உறுப்பினர் என்பதன் அடிப்படையில் இக்கூட்டத்தில் ஓ.பி ரவீந்திரநாத் குமாரும் கலந்துகொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திமுக, அதிமுக பிரமுகர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டால் முகம் கொடுத்துக் கூட பேசாமல் கடந்துசென்றுவிடுவர். எடப்பாடி பழனிசாமி முதல்வரானதற்கு அது அடியோடு மாறியது. திமுக, அதிமுக பிரமுகர்கள் ஒருவருக்கொருவர் சகஜமாகவே பேசி வருகின்றனர். அந்த வகையில் தேனி கூட்டத்திற்கு வருகை தந்த துரைமுருகனுக்கு, ரவீந்திரநாத் குமார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கூட்டம் முடிந்த பிறகு துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா ஆகியோருடன் ரவீந்திரநாத் சுமார் அரை மணி நேரம் வரையில் பேசியிருக்கிறார். இதில் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தும், அரசியல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon