top ten news today January 26 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

குடியரசு தினம்! top ten news today January 26 2024

75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 26) தேசிய கொடியேற்றுகிறார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

வெல்லும் ஜனநாயகம் மாநாடு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

பவதாரணி காலமானார்!

பித்தப்பை புற்றுநோயால் உயிரிழந்த இளையராஜா மகள் பவதாரணியின் உடல் இலங்கையிலிருந்து இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

கிராம சபை கூட்டம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும்  கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை நாம் தமிழர் ஒன்றிய தலைவர் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 615-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.

ஸ்டார் படத்தின் கதாநாயகி!

கவின் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் கதாநாயகியை படக்குழு இன்று அறிமுகப்படுத்துகிறது.

இன்றைய புரோ கபடி போட்டிகள்!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் யு மும்பா, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

சுற்றுலாத்தலங்களில் இலவச அனுமதி!

குடியரசு தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் வனத்துறைக்கு கட்டுப்பட்ட சுற்றுலாத்தலங்களில் இன்று பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் சேமியா

‘கழக’ தலைவர் விஜய்… அதிகாலை கூட்ட ரகசியம்!

top ten news today January 26 2024

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *