‘கழக’ தலைவர் விஜய்… அதிகாலை கூட்ட ரகசியம்!

Published On:

| By Aara

Vijay becomes the party leader

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.  அதற்கான நிர்வாக ரீதியான ஏற்பாடுகள், உள் கட்டமைப்பு ரீதியான ஏற்பாடுகள், கொள்கை ரீதியான ஏற்பாடுகள்,  சட்டதிட்ட ரீதியான ஏற்பாடுகள் என அனைத்து வகை ஏற்பாடுகளிலும் தீவிரமாக இருக்கிறார் விஜய். Vijay becomes the party leader

இந்த நிலையில் இன்று ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 5.30  மணிக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 150 பேர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜயின் அலுவலகத்திற்கு ரகசியமாக சென்றனர்.

வெளிச்சம் இருக்கும் காலை வேளையில் இவ்வளவு பேர் திரண்டு வந்தால் அது மீடியாக்களுக்கு கசிந்து விடும் என்பதால் விஜய் உஷாராக நேற்று இரவே அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து, அதிகாலை தனது அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டார்.

அதன்படியே சூரிய உதயத்திற்கு முன்பே விஜய் அலுவலகத்திற்கு சென்று விட்டார்கள் நிர்வாகிகள்.  கொஞ்ச நேரத்தில் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு விஜய்யும் அலுவலகம் சென்றார்.

அங்கே அவர்களோடு காலை சிற்றுண்டியும் காபியும் அருந்திய விஜய் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்கான அஃபிடவிட்டுக்களில் முன்மொழிபவர்கள் மற்றும் வழிமொழிபவர்களின் கையெழுத்துக்களை நேரடியாக தானே வாங்கினார்.

தேர்தல் ஆணையம் வகுத்திருக்கும் விதிமுறைகளின் படி இந்த ஆவணங்களில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.  அதன்படி கட்சியின் தலைவராக விஜய்யும் மற்றும் துணை நிர்வாகிகள் பதவிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்ட இந்த முக்கியமான நிகழ்வை அடுத்து தனது கட்சியின் தூண்களாக விளங்கப் போகும் இந்த நிர்வாகிகளிடம் கொஞ்ச நேரம் உரையாடி இருக்கிறார் விஜய். அதன் பிறகு அவர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

விரைவில் இந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில்.

இவ்வளவு தூரம் ரகசியமாக கட்சி பணிகளை மேற்கொள்ளும் விஜய் தனது கட்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.

’அது சஸ்பென்ஸ்…  ஆனால் ’கழகம்’ என்ற வார்த்தையில் தான் கட்சியின் பெயர் முடியும்’ என்று சிரித்தார்கள்.

நேற்று வரை தளபதி விஜய்யாக இருந்தவர் இன்று முதல் கழகத் தலைவர் ஆகிறார் என்பதுதான் உண்மை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை நோக்கி பாயத் தயாராகும் ED

’பவதாரிணி மறைவு… இசையுலகிற்கு இழப்பு’ : அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Vijay becomes the party leader

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share