கிரீஸ் பிரதமர் இந்தியா வருகை! top ten news today in Tamil February 21 2024
கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (பிப்ரவரி 21) இந்தியா வருகிறார்.
அதிமுக விருப்ப மனு!
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.
மநீம 7-ஆம் ஆண்டு விழா!
மக்கள் நீதி மய்யத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கமலஹாசன் இன்று கொடியேற்றுகிறார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை!
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நல இணை ஆணையர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ரயில்கள் ரத்து!
விழுப்புரம் – திருச்சி இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான் மோதல்!
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
மாசி மாத பெளர்ணமியை ஒட்டி இன்று முதல் பிப்ரவரி 24 வரை சதுரகிரி மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 641-வது நாளாக பெட்ரோல். டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெருக்கடி நிலையில் தமிழ்நாட்டின் கடன்! பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
top ten news today in Tamil February 21 2024